• Thu. Nov 6th, 2025

Trending

போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக… தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை…

தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் ஆலோசனை…

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. விருப்பமுள்ளோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என இந்திய கிரிக்கெட் வாரிய…

சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கை!.

அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் கடுமையான சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று இரவு முதல் நாளை இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமியின் வட அரைகோளத்தில் காந்த…

+1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது.

14ஆம் தேதி 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகிறது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் +1 பொதுத் தேர்வு எழுதியுள்ள நிலையில் வரும் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

3 ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி வழங்காத ஒன்றிய அரசு!.

சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2ம் கட்ட பணிகளுக்கு 3 ஆண்டுகளை கடந்தும் நிதி வழங்காத ஒன்றிய அரசு, அதே திட்டத்தோடு அறிவிக்கப்பட்ட மற்ற 3 திட்டங்களுக்கு நிதி வழங்கியது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம் ஆகி உள்ளது.…

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பெங்களூரு 13 செ.மீ., துமாகூரு 10 செ.மீ., மைசூரு, ராமநகராவில் 9 செ.மீ., ஹாசன், பெலகாவியில் 8 செ.மீ., மாண்டியா, சிக்கபலாபுரா 7 செ.மீ., குடகு 6…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் வெளியீடு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண சேவைகளுக்கான (ஆர்ஜித சேவை) ஆகஸ்ட் மாத டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு வரும் 18ம்தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் வெளியிடுகிறது. இந்த சேவை டிக்கெட்டுகளில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை…

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி கைது!.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடாவை போலீசார் கைது செய்தனர். கடந்த 10 மாதங்களாக தன்னை மிரட்டி தேவராஜே கவுடா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் ஹோலெநரசிபுரா நகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சூப்பர் ஜயன்ட்சுடன் இன்று சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் டாப் 5ல் இருந்தாலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய…

ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!..

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 30% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம். டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தான் ஆட்டமிழந்தது குறித்த சர்ச்சையில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.