• Sat. Oct 18th, 2025

அமமுக ஆலோசனைக் கூட்டம்-டிடிவி தினகரன் பங்கேற்பு!..

Byமு.மு

Dec 28, 2023
அமமுக ஆலோசனைக் கூட்டம்-டிடிவி தினகரன் பங்கேற்பு

சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சி ஜனவரி 3ஆம் தேதி முதல் நடைபெறுகிறது!

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்!
வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைந்து செயலாற்றிடும் வகையில், சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சி வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் கீழ்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இக்கூட்டங்களில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்க இருக்கிறார்கள்.

இக்கூட்டத்தில் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாள்
இடம்வருவாய் மாவட்டங்கள்
03.01.2024 புதன்
காலை 10 மணி
R.N.பங்ஷன் பேலஸ் திருமண மண்டபம், டோல்கேட், வேலூர்1. இராணிப்பேட்டை
2.வேலூர்
3. திருப்பத்தூர்
4. திருவண்ணாமலை
06.01.2024
சனிக்கிழமை மாலை 4 மணி
M.P.K. மஹால் திருமண மண்டபம்,
100 அடி சாலை, அசோக் நகர்,
சென்னை
1. சென்னை
2. செங்கல்பட்டு
(திருப்போரூர், செய்யூர்,
மதுராந்தகம் சட்டமன்றத்தொகுதி)
08.01.2024
திங்கள் காலை 10 மணி
வன்னியர் திருமண மஹால், தருமபுரி
1. தருமபுரி
2. கிருஷ்ணகிரி
09.01.2024
செவ்வாய்
காலை 10 மணி
ரவி மஹால்,
பெரிய அக்ரஹாரம், பவானி
மெயின் ரோடு, ஈரோடு
1. திருப்பூர்
2. ஈரோடு
10.01.2024
புதன்
காலை 10 மணி
கொங்கு மண்டபம்,
பரமத்தி ரோடு, நாமக்கல்
1. நாமக்கல் 2. கரூர்
(கரூர், அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி)