• Sun. Oct 19th, 2025

நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்!.

Byமு.மு

Feb 22, 2024
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

வருகின்ற 25-02-2024 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 12 மணியளவில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மேலவாடியக்காட்டில் உள்ள, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களது இல்லத்தில், அண்மையில் மறைவெய்திய அவரது தந்தை ஐயா தமிழ்ச்செல்வன் அவர்களது நினைவுப் படத்திறப்பு நிகழ்வானது, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

அதனைத்தொடர்ந்து அருகில் உள்ள திடலில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.