நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி திமுக தொகுதி பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கழக பொருளாளர், நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் TR BAALU அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இன்று (03-02-2024) கலந்து கொண்டேன்.
இக்கூட்டத்தில் கழக தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் அமைச்சர் பெருமக்கள் I.Periyasamy , MRK.Panneerselvam , முனைவர் க.பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், துணை பொதுச் செயலாளர் வீரபாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.