• Fri. Oct 17th, 2025

எடப்பாடி கனவில்தான் இனி முதல்வராக முடியும்: டிடிவி.தினகரன்

Byமு.மு

Oct 26, 2024
சிறுமி படுகொலை செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது - டிடிவி தினகரன்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியதாவது: 2026 தேர்தலில் என்டிஏ கூட்டணி அமைப்பதற்காக நாங்கள் அனைவரும் முயற்சி செய்து வருகிறோம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று இணைய வேண்டும். நண்பர் வைத்திலிங்கம் வீட்டில் ரெய்டு நடப்பதன்மூலம் அமலாக்கத்துறை தன்னிச்சையாக செயல்படுவது உறுதியாகியுள்ளது. வைத்திலிங்கம் அதனை சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை உள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியில் செய்த தவறுகளுக்கு கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் இருக்கிறார். அவரிடம் இரட்டை இலை சின்னம் இருப்பதால், அதனை நம்பி அங்கு இருப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர். இரட்டை இலை பலவீனமடைந்துள்ளது. இனி எடப்பாடி முதல்வராவது கனவில் தான் நடக்கும். 2026 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அக்கட்சிக்கு முடிவுரை எழுதி விடுவார். இவ்வாறு கூறினார்.