• Mon. Oct 20th, 2025

வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

Byமு.மு

Aug 9, 2024
வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க போதுமான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் நடந்திருப்பதும், தொடர்ந்து, ஒன்றிய அரசாங்கத்தின் மவுனமும் தகுதி நீக்கம் சதியாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை வலுவாக எழுப்பியுள்ளது. இதற்கு ஒன்றிய பாஜ அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.