• Mon. Oct 20th, 2025

சமத்துவ சமூகம் உருவாக போராடிய இமானுவேல் சேகரனாரை போற்றுவோம்- அண்ணாமலை

Byமு.மு

Sep 12, 2024
சமத்துவ சமூகம் உருவாக போராடிய இமானுவேல் சேகரனார் போற்றுவோம்- அண்ணாமலை

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்த இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11. ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும், சமத்துவ சமூகம் உருவாகவும் போராடிய இமானுவேல் சேகரன் நினைவைப் போற்றி வணங்குகிறோம். அனைவரும் சமம் என்ற உயரிய லட்சியத்தைக் கொண்டு, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.