• Sun. Oct 19th, 2025

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மநீம கடும் எதிர்ப்பு

Byமு.மு

Sep 23, 2024
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மநீம கடும் எதிர்ப்பு

 மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல். பல்வேறு கலாச்சாரங்களும், நம்பிக்கைகளும், பருவ காலங்களும், நில அமைப்பும் கொண்ட பன்மைத்துவ தேசத்தின் ஜனநாயகத்தை ஒற்றை கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சியை பன்மைத்துவத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட ஜனநாயகத்தின் காவல் வீரர்களான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.