ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களின் திருப்பணி முன்னேற்றம் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் இன்று (07.02.2024) ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களை புனரமைக்கும் வகையில் ரூ.304.84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 197 திருக்கோயில்களின் திருப்பணிகளில் 16 திருக்கோயில்களில் பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ள நிலையில் இதர தொன்மையான திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளின் பணி முன்னேற்றம் குறித்தும், சட்டமன்ற அறிவிப்புகளின்படி புரசைவாக்கம், அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், நங்கநல்லூர், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் தங்கத்தேர் திருப்பணிகள், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருக்கருகாவூர், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், சென்னை, அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் வெள்ளித் தேர் திருப்பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லும் வகையில் தொடங்கப்பட்டுள்ள அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணத்தை 200 பக்தர்களுடன் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து தொடங்குவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், காசி – இராமேசுவரம் ஆன்மிகப் பயணத்தின் அடுத்தக்கட்ட பயணங்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கடந்தாண்டு மகா சிவராத்திரி பெருவிழாவானது மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், பேரூர், அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்பட்டதை போல சட்டமன்ற அறிவிப்பின்படி இந்தாண்டு கூடுதலாக மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களையும் சேர்த்து 7 திருக்கோயில்களில் வருகின்ற மார்ச் 8ந் தேதி மகா சிவராத்திரி பெருவிழாவினை ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடிட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நிறைவாக, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில், சட்டமன்ற அறிவிப்புகளின்படி இந்து சமய அறநிலையத்துறையில் நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும், குறிப்பாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில் திருப்பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்திட மண்டல இணை ஆணையர்களும், பொறியாளர்களும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஆன்மிகப் பயணங்கள் மற்றும் மகா சிவராத்திரி பெருவிழாக்களை இறையன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து நடத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் திரு.பி.பெரியசாமி, இணை ஆணையர்கள் திரு.ச.இலட்சுமணன், திரு.பொ.ஜெயராமன், திருமதி கோ.செ.மங்கையர்க்கரசி, திருமதி இரா.வான்மதி, திருமதி கி.ரேணுகாதேவி, திருமதி ஜ.முல்லை, மாவட்ட வருவாய் அலுவலர்கள் திருமதி கோ.விஜயா, திரு.த.குமரேசன், திருமதி சு.ஜானகி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..