நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் அரசியல் தளம் தற்போது சூடு பிடித்து பரபரப்பாக உள்ளது.
கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகள், மாநாடுகள் பாதயாத்திரை, ரதயாத்திரை என நடத்துவதாக விறுவிறுப்பாக உள்ளது.
தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முனைப்புடன் காய் நகர்த்தி வருகின்றது.
எதிர்கட்சி வரிசையில் உள்ள இந்தி கூட்டணியில் இருந்து தற்போது நித்திஷ் குமார் தனது கட்சியுடன் விலகி பிஜேபியில் இணைந்துள்ளார். இதன் மூலமாக ஒன்பதாவது முறையாக பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
காங்கிரஸ் சார்பாக ராகுல் பல இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகின்றார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை,
அஇதிமுக கூட்டணி இரட்டை இலை சின்னத்தில் 40 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் கோயில்களிலும், மறுபுறம் அனைத்து சமூகத்துடனான கூட்டமைப்பினை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அறிக்கைகளோடு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க மும்முரமாக செயல்பட்டு வருகின்றார்.
திமுக, விசிக தனித்தனியாக மாநாடுகள் நடத்தி தங்களுடைய பெரும்பான்மையை காண்பிக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமுமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியாக செயல்பட உள்ளன. ஆனாலும் தொகுதி பங்கீடு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
நாம் தமிழர் கட்சி எப்பொழுதும் போல் தனித்து களமிறங்க உள்ளது.
பாமக மற்றும் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
மக்கள் நீதி மையம் செயல்பாடுகள் குறித்த எந்த ஒரு தகவல்களும் இல்லை.
அதிமுகவிலிருந்து பிரிந்த ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆளுக்கு ஒரு பக்கம் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றார்.
இவர்களுடன் களம் இறங்க நடிகர் விஜய் தனது கட்சியை, பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த எந்த ஒரு தீர்மானமும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இந்த அரசியலின் அச்சாணிகளான மக்கள் தேர்தல் அன்று பார்த்துக் கொள்ளலாம் என்று தங்கள் பணிகளை நோக்கி ஓடிக் கொண்டுள்ளார்கள். மக்கள் தலையெழுத்தை மாற்றும் ஆட்சி அமையுமா, அன்று ஆட்சி மாற்றம் ஏற்படுமா?.. பொறுத்திருந்து பார்ப்போம்..