• Sun. Oct 19th, 2025

பருத்தியை அரசே கொள்முதல் செய்ய பிரேமலதா கோரிக்கை

Byமு.மு

Aug 6, 2024
பருத்தியை அரசே கொள்முதல் செய்ய பிரேமலதா கோரிக்கை

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வறட்சி கால பயிரான பருத்தி விவசாயிகளின் முதல் தவணை மகசூல் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் தவணை மகசூல் முழுவதும் சரியான விலை நிர்ணயம் இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், தனியார் கொள்முதல் நிறுவனங்கள் அனைவரும் கூட்டாக முடிவு எடுத்து குறைந்த விலை நிர்ணயம் செய்த காரணத்தினால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, 2ம் மகசூலையாவது தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.