“யாரோ சிறியர் நரியர்
சூதோ வாதோ செய்திடத் துணிவரேல்
பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்!
தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்!
பெரியாரின் பிள்ளைகள் நாம்
பேரறிஞர் தம்பிகள் நாம் – என்றும்
பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!”

என முத்தமிழறிஞர் கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன்.