• Sat. Oct 18th, 2025

தென்மாவட்ட மக்களுக்கு அ.ம.மு.க சார்பில் நிவாரணப் பொருட்கள்..

Byமு.மு

Dec 20, 2023
தென்மாவட்ட மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கழகங்கள் சார்பாக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்காக வெள்ள நிவாரணப் பொருட்கள் மதுரையில் இருந்து வாகனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கழக இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளரும், கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், கழக செய்தி தொடர்பாளருமான திரு.K.டேவிட் அண்ணாதுரை, கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி.வளர்மதி ஜெபராஜ், மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.M.ஜெயபால், மதுரை மாநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.S.ராஜலிங்கம், கழக மாணவியர் அணி செயலாளர் திருமதி.B.ஜீவிதா நாச்சியார், கழக செய்தி தொடர்பாளர் கழக விவசாயப் பிரிவு தலைவர் திரு.அருவுகராஜா, கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் தமிழ்நாடு ஹோட்டல் திரு.K.தவமணி, கழக வழக்கறிஞர் திரு.வீரவெற்றிபாண்டியன், பிரிவு இணைச்செயலாளர் திரு.M.அழகாத்தேவன் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத்தை அனுப்பி வைத்தனர்.