திருச்சிக்கு இன்னும் பல முதலீடுகள் வர இது நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவதாக மதிமுக திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான பாதைகளை கண்டடைவதை, உருவாக்குவதை தன் பெரும் கடமையாக கருதி தமிழ்நாட்டை (One Trillion Dollar Economy) ஒரு ட்ரில்யன் டாலர் பொருளதார மாநிலமாக முன்னேற்றும் மாபெரும் கனவை கண்டு, அதையே இலக்காக நிர்ணயித்து செயல்பட்டுகொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.
இந்தியாவிலேயே முன்மாதரி மாநிலமாக, சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு (TAMIL NADU Global Investors Meet – 2024) நடத்தப்பட்டது. இதன் மூலமக பல்லாயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், இலட்சியத்தை நோக்கிய பயணத்தின் இன்னொரு முயற்சியாக, தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் அவர்கள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தில், கூகுள், மைக்ரோ சாஃப்ட் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் துறை (Tech Industries) நிறுவனங்களின் 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை பெற தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுநாள் வரை கையெழுத்தாகியுள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்க உள்ளதால், பல்லாயிரக்கணக்கான படித்த, பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து தரும் ஜேபில் நிறுவனம் (Jabil Industries) 2000 கோடி ரூபாய் முதலீட்டில் திருச்சி மாவட்டத்தில் தொழிற்சாலை தொடங்க இருப்பதாகவும், இதனால் ஐயாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். உள்ளபடியே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்னும் பல முதலீடுகள் எனது திருச்சி தொகுதி நோக்கி வர இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதல்வர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










