• Sun. Oct 19th, 2025

தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா தேர்வு

Byமு.மு

Aug 29, 2024
தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா தேர்வு

தமிழ்நாடு சார்பில் தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏவாக பதவி வகித்து வரும் அசன் மவுலானா நிறுத்தப்பட்டார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் அந்த பதவிக்கு ஒருமனதாக போட்டியின்றி தேர்வானார். தமிழ்நாடு, கேரளாவை உள்ளடக்கிய ஹஜ் கமிட்டியின் 6வது மண்டலத்திற்கான உறுப்பினராக அசன் மவுலானா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.