பாமக தலைவர் அன்புமணி எம்பி, நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்களும் உள்ளது. சில அம்சங்கள் மாநில அரசுக்கு பாதகமாக இருக்கிறது. நாங்கள் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம். ஒன்றிய அரசின் கொள்கைகளை, மாநில அரசுகள் மீது திணிக்கக் கூடாது. ஒன்றிய அரசு புதிய கல்வி கொள்கையை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறது. இல்லாவிட்டால் நிதி கொடுக்கமாட்டோம் என கூறுகிறார்கள். இது தவறான ஒன்றாகும்.
கல்வி கொடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இதனால் மாணவர்கள் பாதிக்கக் கூடாது. கல்வி மாநில பட்டியலுக்கு வரவேண்டும். பாஜ கூட்டணியில் பாமக இருந்தாலும், பாமக அதன் கொள்கையை விட்டுக் கொடுக்காது. தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் 40 ஆண்டுக்கு மேலாக போராடி வருகிறார். தமிழகத்தில் உழைக்கின்ற பெரிய சமுதாயங்களான பட்டியலின சமுதாயமும், வன்னியர் சமுதாயமும் இன்று மதுவுக்கு அடிமையாகி விட்டது. மதுவில் இருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். மதுவுக்கு எதிராக யார் போராடினாலும், நாங்கள் வரவேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பரமக்குடி: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்திய பின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் ஒற்றைக் கருத்து உடைய அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என திருமாவளவன் அறிவித்தார். அவர் அழைப்பை ஏற்று அந்த மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்வது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
மாணவர்களின் பிஞ்சு நெஞ்சில் விஷத்தைப் பரப்பும் விஷயத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்த எம்பி தேர்தலில், இந்தியாவில் ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தப்படியாக ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் கட்சிக்கொடி சின்னம் ஏதுமின்றி, தன்னந்தனியாக சுயேச்சையாக போட்டியிட்டு 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் பெற்ற ஒரே சுயேட்சை வேட்பாளர் நான் தான். இதன் மூலம் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் எங்கள் பக்கமே உள்ளனர் என நிரூபணமாகியுள்ளது. எனவே, அதிமுகவை மீட்கும் தர்மயுத்த போராட்டம் தொடரும்’’ என்றார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










