சென்னை 6 ஜனவரி 24.
பிரெஷ் வொர்க் மற்றும் சென்னை ரன்னர்ஸ் இணைந்து நடத்தும் சென்னை மராத்தான் ஓட்டப்பந்தயம் நாளை நேப்பியர் பாலத்தில் தொடங்கி இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரையும் நடைபெற இருக்கிறது.
இதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10km, 21km, 32km, 42km ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது.
இந்த ஓட்டப்பந்தயத்தின் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
போட்டியாளர்கள் தங்களை வாகனத்தை நிறுத்துவதற்கு மெட்ராஸ் யூனிவர்சிட்டி மற்றும் பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் பார்க்கிங் ஏரியா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டப்பந்தய தூரத்தில் இரண்டு கிலோ மீட்டர்களுக்கு இடையில் ஒரு உதவி மையம் நிறுவப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சி உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்துவதற்கும் சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வாகவும் மற்றும் அதற்கான நிதி திரட்டுவதற்கான ஏற்பாடாகவும் நடக்க இருக்கிறது.
https://thechennaimarathon.com/



