கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒரு புறம் தோனி, மறுபுறம் விராட்கோலி என இரு ஜாம்பவான்கள் மோதி கொள்வதால் முதல் ஆட்டமே ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தோனி கேப்டன் பதிவில் இருந்து விலகிய நிலையில் ருத்ராஜ் கெய்க்வாட் அணியை எப்படி வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது அதே நேரத்தில் இம்பாக்ட் பிளேயர் விதி இருப்பதால் முடிந்த வரை தோனி பீல்டிங்கின் போது களத்தில் நின்று ருத்ராஜ்க்கு உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியின் தொடக்க வீரர் டேவன் கான்வே இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தினாலும் அவருக்கு பதிலாக மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ராவீந்திரா அந்த இடையில் களமிறங்க வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் டேரல் மிட்செல், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். சுழற்பந்து வீச்சை குறிவைத்து தாக்கும் ஷிவம் துபே காயம் காரணமாக அங்கேற்பது சந்தேகம் என்றாலும் அந்த இடத்தை உள்ளுர் போட்டிகளில் கலக்கிய சமீர் ரிஸ்வி நிரப்புவார் என தெரிகிறது.
கடந்த சீசனில் டெத் ஓவர்களில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய மதீஷ் பதிரானா காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் அனுபவ வீரர்களான தீபக் சாஹர், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரை அணி பெரிதும் நம்பியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டராக ஜொலிக்க வாய்ப்புள்ளது. மகளிர் பிரிமியர் லீக்கில் ஆர்.சி.பி மகளிர் அணி கோப்பை வென்று இருப்பது டுப்ளஸி தலைமையிலான ஆடவர் அணி மீது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்தே உலக கோப்பையில் இடம் கிடைக்கும் என்பதால் தனிப்பட்ட முறையிலும் தன்னை விராட் கோலி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
டுப்ளஸி, மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதார் , தினேஷ் கார்த்திக் என பேட்டிங்கில் வழுவுவகை திகழும் ஆர்.சி.பி இந்த முறை அணியின் பந்து வீச்சையும் பலப்படுத்தியுள்ளது. முஹகமது சிராஜ், ரீஸ் டாப்ளி, அல்சாரி ஜோசப், பெர்குஷன், யாஷ் தயாள் என ஒரு பட்டாளமே நம்பிக்கை அளிக்கிறது. மேக்ஸ்வெல், கரண் சர்மாவுடன் கேமரூன் கிரீனும் பந்து வீச்சில் அவ்வப்போது கைகொடுப்பர் என்பது அணிக்கு கூடுதல் பலம். இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 31 போட்டிகளில் 20 சென்னை அணியும் 10ல் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை அதுவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய 8 போட்டிகளில் 7 ஆட்டங்களில் சி.எஸ்.கே வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..