ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் லக்னோ எஸ்ஜி – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இபோட்டியில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்ற லக்னோ, அடுத்து பஞ்சாப், பெங்களூரு, குஜராத் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி அசத்தியது . கேப்டன் கே.எல்.ராகுல், டி காக், ஸ்டாய்னிஸ், நிகோலஸ் பூரன், க்ருணால் பாண்டியா அதிரடி பேட்டிங்கில் கலக்க… யாஷ் தாகூர், நவீன் உல் ஹக், மயாங்க் யாதவ் ஆகியோர் பந்துவீச்சில் முத்திரை பதித்து வருகின்றனர்.
தமிழக வீரர் மணிமாறன் முதல் ஓவரை வீசும் அளவுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் லக்னோ அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். அதே சமயம், ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் நடப்பு சாம்பியன் சென்னைக்கு ‘தண்ணி’ காட்டினாலும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. டெல்லி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.
அதிலும் தொடர் தோல்வியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மும்பை அணிக்கு முதல் வெற்றியை பரிசாகத் தந்தது டெல்லி. அணியில் நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை என்றாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் திணறி வருகின்றனர். வார்னர், பிரித்வி, பன்ட், மார்ஷ், அக்சர், ஹோப் அதிரடி எடுபட்டால் மட்டுமே லக்னோவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இஷாந்த்தின் அனுபவ வேகம் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. பந்துவீச்சு வியூகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் கேப்பிடல்ஸ் உள்ளது.
4வது வெற்றிக்காக லக்னோவும், 2வது வெற்றிக்காக டெல்லியும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டம் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
* இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளதில், லக்னோ 3-0 என ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
* அதிகபட்சமாக லக்னோ 195 ரன், டெல்லி 189 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக லக்னோ 193, டெல்லி 143 ரன் எடுத்துள்ளன.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










