தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (5.1.2024) தலைமைச் செயலகத்தில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹைதீன் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
உடன் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வி. அப்துல் வஹாப், நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகமது அபுபகர், தமிழ்நாடு வக்ஃப் போர்டு தலைவர் எம். அப்துல் ரகுமான், இளைஞர் அணி தலைவர் முனாவர் அலி, மாணவர் அணி தேசிய தலைவர் முகமது அர்சத் ஆகியோர் உள்ளனர்.