• Mon. Oct 20th, 2025

14 வது தேசிய வாக்காளர் தினம்-பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி!

Byமு.மு

Jan 12, 2024
14 வது தேசிய வாக்காளர் தினம்-பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி

தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி 21.01.2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 11.00 A.M முதல் 11.15 A.M வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம்.

https://www.erolls.tn.gov.in/Quiz2024

                இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் 18.01.2024 மற்றும் 19.01.2024 (2 நாட்கள் மட்டும்) ஆகிய நாட்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். “இந்தியாவில் தேர்தல்கள்” என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளவும்.

இணையதளம்:https://www.erolls.tn.gov.in/Quiz2024  
மாநில உதவி மைய எண்:1800 – 4252 – 1950
மாவட்ட உதவி மைய எண்:1950