• Sun. Oct 19th, 2025

கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 199-வது வாரிய கூட்டம்!

Byமு.மு

Jan 5, 2024
கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 199-வது வாரிய கூட்டம்

சென்னை குறளகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய கூட்ட அரங்கில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 199-வது வாரிய கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் முனைவர் சீ.சுரேஷ்குமார், இ.ஆ.ப., வாரிய உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.