• Sun. Oct 19th, 2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி உதவி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Byமு.மு

Dec 25, 2023
உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு –தமிழ்நாடு அரசு

தூத்துக்குடி மாவட்டம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த திரு.ஆ.முருகன் (வயது 45) த/பெ. திரு.ஆத்திக்கண்ணு என்பவர் (24.12.2023) அன்று கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.