மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டத்தின் மூலம் முதல் தொடக்க முகாமாக இராஜபாளையம் நகராட்சி 3,4,5,15,16,17 போன்ற வார்டுகளை ஒருங்கிணைத்து பசும்பொன் திருமண மண்டத்தில் பொறுப்பு அலுவலரான துணை ஆட்சியர் கார்த்திகேயனி அவர்கள் முன்னிலையில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் அவர்களும் 16 துறை அதிகாரிகள் கலந்து கொண்ட முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், பொதுமக்களை தேடி தேடி பணியற்றக்கூடிய மக்களை தேடி மருத்துவம் இல்லம் தேடி கல்வி கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை போன்ற சிறப்பான திட்டத்தின் வரிசையில் இன்னொரு மயில்கல்லாக மக்களுடன் முதல்வர் திட்டம் மிகச்சிறப்பானதாக அமையும், இத்திட்டம் மூலம் பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிட நல்வாய்ப்பாக இத்திட்டம் செயல்படும் எனக்கூறினார். மேலும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் தங்களிடம் கொடுக்கும் மனு தங்களிடம் கொடுக்கப்பட்ட மனு என்று எண்ணாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமே நேரடியாக மனு கொடுத்ததுபோல் நினைத்து உடனுக்குடன் மனு மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென MLA அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி நகர்மன்ற உறுப்பினர்கள் 16 துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
