• Mon. Oct 20th, 2025

தலைமைச் செயலகத்தில் 40 கணினிகளுடன் கூடிய கண்காணிப்பு அறை!.

Byமு.மு

Feb 19, 2024
தலைமைச் செயலகத்தில் 40 கணினிகளுடன் கூடிய கண்காணிப்பு அறை

தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று 19.2.2024 நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்தார்.

இந்நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் தலைமைச் செயலகத்தில் தற்காலிமாக 40 கணினிகள் கொண்ட கண்காணிப்பு அறை அதற்குரிய அமைக்கப்பட்டு தொழில்நுட்பப் பணியாளர்களுடன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளாக 2 கோடிய 8 இலட்சத்து 76 ஆயிரத்து 480 பேருக்கு கைப்பேசி குறுஞ்செய்திகளாக அனுப்பப்பட்டு, அது 1 கோடியே 77 இலட்சத்து, 45 ஆயிரத்து 8 பேர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.

மேலும், நிதிநிலை அறிக்கை வெளியான உடனுக்குடன் அதன் சிறப்பம்சங்கள் குறித்து தமிழில் 93 சமூக ஊடக விளம்பர அட்டைகளும், ஆங்கிலத்தில் 37 சமூக ஊடக விளம்பர அட்டைகளும் தயார் செய்யப்பட்டது.

இச்சமூக ஊடக விளம்பர அட்டைகள், குறும்படங்கள் வலையொளி, முகநூல், படவரி, இணையவழி, வாட்ஸ்அப், குறும்படங்களாகவும், சமூகஊடக விளம்பர அட்டைகளாகவும் தயார் செய்தும் பகிரப்பட்டு வருகிறது.

நிதித்துறையும் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து முதல் முறையாக உடனுக்குடன் நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களின் செய்திகளை அனைவருக்கும் பகிர்ந்து அரசின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.