தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 2024 – பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 19,484 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் தகவல்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 2024-ஆம் ஆண்டு வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் தலைமையில், இன்று (08/01/2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரரெட்டி, இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் 12/01/2024 முதல் 14/01/2024 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,706 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,006 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 16/01/2024 முதல் 18/01/2024 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,130 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,459 சிறப்பு பேருந்துகள்.