• Sun. Oct 19th, 2025

அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் – தினகரன்

Byமு.மு

Feb 24, 2024
அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் - தினகரன்

தமிழக மக்களின் வளர்ச்சியையே லட்சியமாக கொண்டு இந்தியாவுக்கே முன்மாதிரியான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று.

யார் போற்றினாலும் தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே எனக்கூறி தமிழக மக்களின் நலனுக்காக அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் காவல்நிலையம், மழைநீர் சேகரிப்பு, மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி என இதய தெய்வம் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்கள் அனைத்தும் பூமி உள்ளவரை அவரின் புகழை பாடிக் கொண்டே இருக்கும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில் அரசியல் எதிரிகளையும், துரோகிகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்திரையை பதிப்பதோடு, தமிழ்நாட்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் என அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.