• Sat. Oct 18th, 2025

“தேர்தலில் போட்டியிட வரும் 19ஆம் தேதி முதல் விண்ணப்பம்” – துரைமுருகன் அறிவிப்பு

Byமு.மு

Feb 15, 2024
தேர்தலில் போட்டியிட வரும் 19ஆம் தேதி முதல் விண்ணப்பம்" - துரைமுருகன் அறிவிப்பு

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.

போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.50,000/-

(விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.2,000/-வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.)