தமிழக மக்களின் குறைகளையும், மனக்குமுறல்களையும் எந்த வகையிலும் நிவர்த்தி செய்ய முடியாத தி.மு.க அரசால் விளம்பரத்திற்காக தொடங்கப்பட்டிருக்கும் ‘நீங்கள் நலமா’ திட்டம் வேடிக்கையானது வெட்கக் கேடானது.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் விளம்பரத்திற்காக மட்டுமே நாள்தோறும் தொடங்கப்படும் திட்டங்களைப் போல ‘நீங்கள் நலமா’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.
கடந்த பழனிச்சாமி ஆட்சியில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் முறைகேடுகளால் வெறுப்படைந்த பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சியிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இதய தெய்வம் அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட நாடு போற்றும் நல்ல பல திட்டங்களை எல்லாம் முடக்கியதோடு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் தி.மு.க.விற்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அமைந்திருக்கிறது தி.மு.க அரசின் இந்த திட்டம்.
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்ற மறுக்கும் தி.மு.க அரசால் நம்பிக்கைத் துரோகத்திற்குள்ளான மாணவர்கள்.
- டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்திற்கென தலைவரை கூட நியமிக்காத முடியாத நிர்வாக திறனற்ற அரசால் அரசுப் பணி கனவை துறக்கும் அபாயத்தில் இளைஞர்கள்.
- அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என அறிவித்துவிட்டு 50 சதவிகிதம் பேருக்கு கூட வழங்காமல் ஏமாற்றிய தி.மு.க அரசால் ஏமாற்றப்பட்ட குடும்பத் தலைவிகள்.
- இலவச பயணம் என அறிவித்துவிட்டு பேருந்துகளையும் குறைத்து மரியாதைக் குறைவாக நடத்தும் விடியா அரசால் அவமதிக்கப்படும் பெண்கள். முதியோர் உதவித் தொகையை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்துவோம் என அறிவித்துவிட்டு ரூ.200 ரூபாய் மட்டுமே உயர்த்திய தி.மு.க அரசால் புறக்கணிக்கப்பட்ட முதியோர்கள்.
- காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்றில் அணையை கட்ட துடிக்கும் அண்டை மாநிலங்களுக்கு கண்டனம் தெரிவிக்க முடியாத தி.மு.க அரசால் வஞ்சிக்கப்பட்டு வரும் விவசாயிகள்.
- நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் தொடங்கி மருத்தவர்கள், போக்குவரத்து ஊழியர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் போராடும் சூழல்.
- அரசு நிர்வாகத்தின் அடிமட்டத்தில் தொடங்கி உயர்மட்டம் வரையிலான ஊழல் குற்றச்சாட்டுகள், தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தால் நிம்மதியை இழந்த பொதுமக்கள்.
இப்படியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி முதியோர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் நலமாக இல்லாத நிலையில் யாரிடம் நலம் விசாரிக்க நீங்கள் நலமா திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு? என பொதுமக்களே கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைப்பது, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது, வறுமையை வென்று சமதர்மம் காண்பதை லட்சியமாக கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான ஆட்சி முதன்முறையாக அமைந்த தினம் இன்று. பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த கட்சியை தங்களுடைய குடும்ப சொத்தாக்கி, அவரின் கொள்கைகளை குழிதோண்டி புதைத்து, மக்கள் விரோதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் விடியா தி.மு.க அரசால் விளம்பரத்திற்காக தொடங்கப்பட்டிருக்கும் மற்றொரு திட்டமே ‘நீங்கள் நலமா’ திட்டம்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..