• Mon. Oct 20th, 2025

திருவள்ளுர் மாவட்டம்:இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!.

Byமு.மு

Feb 20, 2024
இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

இந்திய தர நிர்ணய அமைவனம், பல்வேறு தர மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் தொழிற்சாலைகள், அரசு, கல்வியாளர்கள் மற்றும் நுகர்வோர் போன்ற பல்வேறு பங்குதாரர்களிடையே தரநிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கிராம பஞ்சாயத்துகள் நாட்டின் அடிமட்ட மட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் அடித்தளமாகும். கிராம அளவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் திட்டங்களைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் கிராமப் பஞ்சாயத்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே, இந்திய தர நிலைகள் மற்றும் அவற்றை செயல்படுத்துவது குறித்து கிராம பஞ்சாயத்துகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முக்கிய அம்சமாகும்.

அதன்படி, இந்திய தர நிர்ணய அமைவந்த்தின் சென்னை கிளை அலுவலகம், திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த கிராம சபைத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 19 பிப்ரவரி 2024 நேற்றும் 20 பிப்ரவரி 2024 இன்றும் நடத்தியது.

திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த 472 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துறைகள் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்களுக்கு BIS செயல்பாடுகள், ஹால்மார்க்கிங், BIS CARE App மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கான முக்கியமான தரநிலைகள் பற்றி விளக்கப்பட்டது. நிகழ்ச்சி பங்கேற்பாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.