• Sun. Oct 19th, 2025

பவானிசாகர் அணை: தண்ணீர் திறந்து விட அரசு ஆணை…

Byமு.மு

Dec 23, 2023
பவானிசாகர் அணை: தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் 25.12.2023 முதல் 23.04.2024 வரையிலான காலத்தில் முதல் 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதமும், அடுத்த 60 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 450 கன அடி வீதமும் மற்றும் மீதமுள்ள 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் ஆக மொத்தம் 120 நாட்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்திற்கு 4017.60 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டம், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.