மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (26.12.2023) தலைமைச் செயலகத்தில், வி.என்.சி. நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் திரு. சி. பாஸ்கர் மற்றும் நிர்வாக குழுவினர் திரு. எல். அரிஹரபுத்திரன், திரு. அமித் சிங், திரு. பிரசாந்த் சின்ஹா, திரு. கவுஷிக் தத்தா ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

கேப்லின் நிறுவனத்தின் தலைவர் திரு. பார்த்திபன் மற்றும் இயக்குநர் திரு. தீனதயாளன் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

எல்&டி நிறுவனத்தின் துணை செயல் தலைவர் திரு. எம்.வி. சதீஷ், மண்டல மேலாளர் திரு. கே.ஜி. சத்தியநாராயணன் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. பிரசன்ன குமார் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் 2 கோடி ரூபாயும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 2 கோடியே 30 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 4 கோடியே 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

முருகப்பா குழுமத்தின் முழு நேர இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. முத்து முருகப்பன், மூத்த துணைத் தலைவர் திரு. டி. கண்ணன் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் தலைமை உற்பத்தி அதிகாரி திரு.சி.எஸ். கோபாலகிருஷ்ணன், மூத்த செயல் இயக்குநர் திரு.ஜே.எச்.லீ, துணைத் தலைவர் திரு. டி. சரவணன், கள தலைவர் திரு.எஸ். விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

செட்டிநாடு குழுமத்தின் தலைவர் திரு.எம்.ஏ.எம்.ஆர். முத்தையா அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

TSF குழுமத்தின் இயக்குநர் திரு. ஸ்ரீவட்ஸ் ராம் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் திரு. அப்துல் ரஹ்மான் மற்றும் உறுப்பினர்கள் – மாநிலங்களவை உறுப்பினர் திரு.எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் திரு. ப. அப்துல் சமது, திருமதி பாத்திமா முசாபர், திரு. முகமது பஷீர், திரு.எம்.கே. கான், திரு. சையது ரேகான் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

உடன் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் திருமதி.ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.