மதுபோதையில் 16வயது சிறுவனை தாக்கிய விவகாரம் – சினிமா பின்னணி பாடகர் மனோவின் 2 மகன்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். செல்போன் சிக்னலை வைத்து தலைமறைவாக உள்ள பின்னணி பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க நெருக்கியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சினிமா பின்னணி பாடகர் வசித்து வரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் கால்பந்து பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் கிருபாகரன்(20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் பயிற்சி செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை பகுதியில் உள்ள மனோவின் வீட்டின் முன்பு அவரது மகன்கள் போதையில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர் பாடகர் மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து தங்களது வீட்டை எதற்கு நோட்டமிட்டவாறு செல்கிறீர்கள் என்று கேட்டு 16 வயது சிறுவன் மற்றும் கிருபாகரன் ஆகியோரை தாக்கி உள்ளனர். இதனை கண்டதும் அவர்களுடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிய நிலையில் சிறுவன் உட்பட இருவரை முட்டி போட வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து சென்று அவர்களது நண்பர்கள் ரோந்து பணியில் இருந்த வளசரவாக்கம் போலீசாரை அழைத்து வந்தனர். இதையடுத்து காயம் அடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, வளசரவாக்கம் போலீசார் ரபிக், ஜாகீர் உட்பட 5 பேர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர். இதில் விக்னேஷ்(28), தர்மா(26) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் போதையில் கால்பந்து பயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் மீது நடத்திய விவகாரத்தில் செல்போன் சிக்னலை வைத்து தலைமறைவாக உள்ள பின்னணி பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க நெருக்கியதாக போலீசார் தகவல் தெரிவிட்டுத்ள்ளனர். மனோவின் மகன்கள் இருவரையும் பிடிக்க வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் ஈசிஆர் விரைந்துள்ளது. செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் சிடிஆர் மூலம் கண்காணித்து தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்ய தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..