• Sun. Oct 19th, 2025

பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு!.

Byமு.மு

May 15, 2024
பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ,திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கரின் கையை ஸ்கேன் செய்து வர நீதிபதி ஜெயபிரதா அறிவுறுத்தியுள்ளார்.