மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை ‘லீலா பேலஸில் 2023 டிசம்பர் 15 முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ள சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் – 2023 போட்டியினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூபாய் 1.77 கோடிக்கான காசோலையை போட்டி நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனுள்ளனர்.
‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023’-தமிழ்நாடு அரசு வழங்கும் ரூபாய் 1.77 கோடிக்கான காசோலையை போட்டி நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களிடம் அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
