தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம். செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் 499 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நான்குவழித்தட சாலைப்பணிகள், திருவள்ளூர் மாவட்டம். திருத்தணி வட்டத்தில் 18 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 219 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை உருவாக்கிடும் வகையில், நெடுஞ்சாலை துறை வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
கட்டி முடிக்கப்பட்டுள்ள 4 சாலைப் பணிகள் மற்றும் ஒரு பாலத்தை திறந்து வைத்தல்
அந்த வகையில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்கள். திருநெல்வேலி மற்றும் ஆலங்குளம் வட்டங்களில் 196 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி செங்கோட்டை – கொல்லம் நான்கு வழிச் சாலை;முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் வட்டத்தில் 108 கோடியே 50 இலட்சம் ரூபாய்செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் முடிச்சூர் -திருப்பெரும்பத்தூர் நான்கு வழிச் சாலை; செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், மதுராந்தகம்மற்றும் உத்திரமேரூர் வட்டங்களில் 54 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புக்கத்துரை – உத்திரமேரூர் நான்கு வழிச்சாலை;
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்தில் 140 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடலூர் – சித்தூர் நான்கு வழிச் சாலை;திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருத்தணி நாகலாபுரம் சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 18 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்;என மொத்தம் 518 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 4 சாலைகள் மற்றும் ஒரு உயர்மட்ட பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
பணிநியமன ஆணைகள் வழங்குதல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 219 இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநர் மரு. ஆர். செல்வராஜ், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் திருமதி.ந.சாந்தி, தலைமைப் பொறியாளர் திரு.இரா.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










