• Mon. Oct 20th, 2025

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவனடி சேர்ந்தார். சசிகலா இரங்கல்

Byமு.மு

Mar 12, 2024
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்-சசிகலா

கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் குருமகாசன்னிதானம், ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல்நலக்குறைவால் சிவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

காளையார் கோவில் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் என ஆண்டுதோறும் குரு பூஜைகளை முன்னின்று செய்தவர்.புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவித்த நிகழ்வின் போது முன்னின்று நடத்திய பெருமைக்குரியவர்.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் அவர்களை இழந்துவாடும் பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.