• Sun. Oct 19th, 2025

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பதை கண்டித்து -முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்

Byமு.மு

Dec 14, 2023

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பதை கண்டித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

தி.மு.க. மக்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது மக்களாட்சிக்கு எதிரானதும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மலினப்படுத்துவதும் ஆகும்.

பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசின் இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கு கண்டனத்துக்குரியது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரிமையை நசுக்குவதுதான் நாடாளுமன்றத்தின் புதிய நடைமுறையாகி வருகிறதா? மக்களாட்சியின் உயரிய கோயிலாகிய நாடாளுமன்ற அவையில் ஏற்பட்ட மிகப்பெரும் பாதுகாப்பு மீறல் குறித்துக் கேள்வி கேட்பதற்காக மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்படுது ஏன்?

15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று கோருகிறோம். நாடாளுமன்றம் என்பது விவாதத்துக்கான களமாக இருக்கவேண்டுமே ஒழிய, எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்காக இருப்பது அறவே கூடாது.