• Mon. Oct 20th, 2025

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்..ஓ பன்னீர்செல்வம்

Byமு.மு

Mar 7, 2024
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்..ஓ பன்னீர்செல்வம்

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9-வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாபாதகச் செயலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி விரைந்து தண்டனைப் பெற்றுத்தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புதுச்சேரி அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கொலைக்கு காரணம் போதைப் பொருள் நடமாட்டம் என்று கூறப்படுகின்ற நிலையில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் புதுச்சேரி அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.