• Sun. Oct 19th, 2025

அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்!

Byமு.மு

Jan 5, 2024
மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நிகழ்ச்சியை எதிர்வரும் 2024-ம் ஆண்டில் நடத்த அரசின் முன் அனுமதி பெறுவதற்காக பின்வரும் வழிகாட்டி நெறி முறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நிகழ்ச்சியை எதிர்வரும் 2024-ம் ஆண்டில் நடத்த அரசின் முன் அனுமதி பெறுவதற்காக பின்வரும் வழிகாட்டி நெறி முறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

  1. திருப்பத்தூர் மாவட்டத்தில் 2024- ஆண்டு எருதுவிடும் விழாவினைநடைபெற ஏதுவாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் உரிய ஆவணங்களுடன் www.jallikattu.tn.gov.in என்ற இணைய முகப்பில்(online) தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. செய்யவேண்டும்
  2. எருதுவிடும் விழா நிகழ்ச்சி சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும் அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை (SOP) கடைபிடித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழா நிகழ்ச்சியை, அரசின் வழிகாட்டுதல்களின் படியும் சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.