கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி நிறுவனத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கல்யாணசுந்தரம் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ராஜேஷ் நம்பியார் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் 2022-23ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 17 கோடியே 73 இலட்சத்து 86 ஆயிரத்து 921 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை அமைச்சர் மருத்துவர் மதிவாணன் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

பொன்பியூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.பொன்னுசாமி, செயல் இயக்குநர்கள் திரு. சூர்ய பிரகாஷ், திரு. லட்சுமிபதி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 கோடியே 6 இலட்சத்து 27 ஆயிரத்து 472 ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.
