• Sun. Oct 19th, 2025

இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து!..

Byமு.மு

Sep 17, 2024
இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்நாளாம் “மீலாதுன் நபி” திருநாளில், உலகெங்கும் வாழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

“உண்மையைப் பேசுதல்; தூய எண்ணத்தோடு வாழ்தல்; ஏழை, எளியோருக்கு உதவிபுரிதல்; அனைவரிடத்திலும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல்; புகழையும், அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல்” என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது இதயமார்ந்த “மீலாதுன் நபி” நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது இதயமார்ந்த “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.