• Sun. Oct 19th, 2025

பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை..!

Byமு.மு

Sep 17, 2024
பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு பழனிசாமி மரியாதை செலுத்தினார். மேலும் பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி அவரது புகழ் ஓங்குக என்று எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். அதில்,

ஜாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துக்களால் நொறுக்கிய கேள்வித் தடி தந்தை பெரியாரின் தடி.

சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை ஆகிய உயரிய கோட்பாட்டு வேள்விகளை நம்மில் விதைத்த அவர்தம் பிறந்தநாளில், அடிப்படைவாதத்திற்கு துளியும் இடமின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம்.
தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.