தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் செ.உமாசங்கர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDIl’s ஹேக்கத்தான்-2023-24, நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. புத்தாக்க கண்டுபிடிப்புக்கள் https://www.edil Innovation.tn.gov.in இணையதளம் வழியாக பெறப்படுகின்றன.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தினை, (Entrepreneurship Development and Innovation Institute EDII-TN) தமிழ்நாட்டில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு 2001ல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் நிறுவியது. இந்நிறுவனம் செயல்படுவதற்கான நிதிகளையும் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க சிந்தனைகளை பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் உருவாக்குதற்காக EDII TN நிறுவனம் ஆண்டுதோரும் உயர்கல்வி மாணவர்களுக்கு இ.டி.ஐ.ஐ ஹேக்கத்தான் போட்டிகளை 2017ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மத்தியில், அவர்கள் படிக்கிற காலத்திலேயே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் சிந்தனையினை தூண்டும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்கள் புத்தாக்க முறையில் சந்தைப்படுத்தக்கூடிய புதிய பொருட்களின் மாதிரிகளை உருவாக்க வேண்டும். (The students have to generate innovative ideas & convert their ideas into marketable product prototypes) இவ்வாறு உருவாக்கப்படும் சிறந்த மாதிரிப் பொருட்களுக்கு ஆண்டுதோறும் உயர்கல்வி மாணவர்களுக்கு 25 முதல் பரிசுகள், தலா ரூபாய் 1 லட்சம் என அரசு வழங்கி வருகிறது. இதுவரையில் 136 மாணவர் அணிகளுக்கு 1.14 கோடி ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகள். வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக்கல்லூரிகள் மீன்வளக்கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் (polytechnics) மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் (ITIs), போன்ற 1,700-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்று வருகின்றன. நடப்பு ஆண்டில் 3.20 லட்சம் மாணவர்கள் இந்தப் போட்டிக்குப் பயிற்சி பெற்று பங்கு பெற்று வருகின்றனர்.
பரிசுகள், பாராட்டுச் சான்றுகள் (இது மாறுதலுக்கு உட்பட்டது இன்னும் அதிக மாணவர்களுக்கு பரிசு தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது). முதல் பரிசு – முதல் 20 அணிகளுக்கு தலா ரூ.1 லட்சம்.
2வது பரிசு 60 அணிகளுக்கு தலா ரூ.25000 ஒவ்வொரு நிலையிலும் மாணவர்களுக்கு பங்கேற்பாளர்கள் சான்று, பாராட்டுச்சான்று, மாணவ வழிகாட்டிகளுக்கு சான்றுகள், வழிநடத்துனர்களுக்கு சான்றுகள், சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு சான்றுகள் வழங்கப்படும்.
இப்போட்டிக்கான மாணவர்கள் கண்டுபிடிப்புக்கள் https://www.edii- Innovation.tn.gov.in/ இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. புத்தாக்க சிந்தனைகளைப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி 20.03.2024 மாலை 5.00 மணியாகும். எனவே உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்க விரும்பினால் உங்களது கல்லூரி நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு தாமதமில்லாமல் மாணவ வழிநடத்துனர்கள் வழியாகப் புத்தாக்க சிந்தனைகளை (Innovative ideas) பதிவு செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..