• Sun. Oct 19th, 2025

பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், சமத்துவம், சுதந்திரம் வழங்குவோம்!

Byமு.மு

Jan 24, 2024
பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், சமத்துவம், சுதந்திரம் வழங்குவோம்

தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.

பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை தெய்வமாக போற்றும் சமுதாயம் தமிழ்ச்சமுதாயம். அவர்களுக்கான உரிமை, அதிகாரம், அங்கீகாரம், சமத்துவம் ஆகிய அனைத்தையும் வழங்க இந்த நாளில் உறுதியேற்போம்.