• Sun. Oct 19th, 2025

தந்தை பெரியார் 50-வது நினைவு நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

Byமு.மு

Dec 24, 2023

முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியார் 50-வது நினைவு நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை

உடன் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.

தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்!
 
“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம்! வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்!