மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.12.2023) தலைமைச் செயலகத்தில், இந்து தமிழ் திசைப் பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய தொகுப்பு நூலான “என்றும் தமிழர் தலைவர்” என்ற நூலை வெளியிட்டார்.
உடன் இந்து தமிழ் திசைப் பதிப்பகத்தின் உதவி ஆசிரியர் திரு. ஆதி வள்ளியப்பன், தலைமை செயல் அலுவலர் திரு. சங்கர் சுப்பிரமணியன், தலைமை உதவி ஆசிரியர் திருமதி சுசித்ரா மகேஸ்வரன், மேலாளர் திரு. இன்பராஜ் ஆகியோர் உள்ளனர்.