மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (21.12.2023) அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நேரில் சென்று, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, வெள்ள சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
உடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜி. லட்சுமிபதி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.