இராஜபாளையம் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆலோசனையின்படி மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மின்சாரம் & நிதித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலை, டி-சர்ட், கைலி,குழந்தைகளுக்கான உடை, போர்வை உள்ளிட்ட ஜவுளிப் பொருட்கள், அரிசி, பருப்பு, சீனி, டீத்தூள், பிரட், பால் பவுடர், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் கேன்கள் அடங்கிய பொருட்களை வெள்ள நிவாரண பொருட்களாக நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.