• Sun. Oct 19th, 2025

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு!..

Byமு.மு

May 3, 2024
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு

கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் பூக்கள் வரத்து குறைந்ததால் அனைத்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ600, ஐஸ்மல்லி ரூ500, ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ400, சாமந்தி ரூ260, சம்பங்கி ரூ150, பன்னீர் ரோஸ் ரூ160, சாக்லெட் ரோஸ் ரூ180 என விலை உயர்ந்து விற்பனையானது. இந்நிலையில், விசேஷம் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று அனைத்து பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லி ரூ300, ஐஸ் மல்லி ரூ200, ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ250, கனகாம்பரம் ரூ500, சாமந்தி ரூ240, சம்பங்கி ரூ60, பன்னீர் ரோஸ் ரூ80, சாக்லெட் ரோஸ் ரூ100 என விலை குறைந்து விற்பனையானது.

அனைத்து பூக்களின் விலை குறைந்ததால் சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் சென்றனர். இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறுகையில், விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் சென்றதால் விற்பனையும் அமோகமாக நடந்தது, என்றார்.